< Back
தேசிய செய்திகள்
விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
தேசிய செய்திகள்

விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

உன்சூர் அருகே விளைநிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசாா் கைது செய்துள்ளனா்.

உன்சூர்

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா கூடலூர் கிராமத்தை ேசர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது40). இவருக்கு சொந்தமாக நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் சந்தோஷ்குமார் கரும்பு விவசாயம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் இவர் கரும்பு செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்து வருவதாக உன்சூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரும்பு தோட்டத்தில் சோதனை செய்தனர்.

அப்போது கரும்பு செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி பயிரிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயிரிடப்பட்டு இருந்த 14 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்