< Back
தேசிய செய்திகள்
காட்டு யானை தாக்கி விவசாயி சாவு; கேரளாவை சேர்ந்தவர்
தேசிய செய்திகள்

காட்டு யானை தாக்கி விவசாயி சாவு; கேரளாவை சேர்ந்தவர்

தினத்தந்தி
|
12 Aug 2022 9:04 PM IST

எச்.டி.கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் கேரளாவை சேர்ந்த விவசாயி பலியானார்.

மைசூரு;

கேரளாவை சேர்ந்தவர்

மைசூரு (மாவட்டம்) டவுன் எச்.டி.கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலன் (வயது 60). விவசாயி. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து இஞ்சி ேபான்ற பயிர்களை பயிரிட்டு வந்தார்.

இதில் பயிர்களின் விளைச்சல் நன்றாக விளைந்திருந்ததால் அவர் இரவு நேரங்களில் தோட்ட காவலுக்காக சென்று வந்தார். இதே போல் நேற்று முன்தினம் இரவிலும் அவர் தோட்ட காவலுக்கு சென்றார்.

அப்போது தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று இரைதேடி பாலனின் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலன், காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதைபார்த்த யானை பாலனை விரட்ட தொடங்கியுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் சாவு

இதையடுத்து காட்டுயானையானது பாலனை தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மறுநாள் காலை ேதாட்டத்திற்கு வந்த அந்த பகுதி மக்கள், பாலன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர். காட்டுயானையும் அவரது தோட்டத்திலேயே நின்றுள்ளது.

இதைபார்த்த அவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கும், எச்.டி.கோட்டை புறநகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

பரபரப்பு

அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் போலீசார் பாலனின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுயானை அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்