< Back
தேசிய செய்திகள்
கே.ஆர்.நகர் தாலுகாவில் தென்னை மரம் முறிந்து விழுந்து விவசாயி பலி
தேசிய செய்திகள்

கே.ஆர்.நகர் தாலுகாவில் தென்னை மரம் முறிந்து விழுந்து விவசாயி பலி

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

கே.ஆர்.நகர் தாலுகாவில் தென்னை மரம் முறிந்து விவசாயி மீது விழுந்து உயிரிழந்துள்ளார்.

மைசூரு

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா எப்பாள் பகுதியை சேர்ந்தவர் மகாதேவா (வயது42). இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில், மகாதேவா விவசாயம் செய்து வந்தார்.

இந்தநிலையில் நெல் மூட்டைகளை அரிசி ஆக்குவதற்கு அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு மோட்டார் சைக்கிளில் மகாதேவா சென்றார். அப்போது நெல் மூட்டைகளை அரிசி ஆலை வாசலில் இறக்கி வைத்தார்.

அப்போது அந்தப்பகுதியில் பலத்த காற்று அடித்தது. இதில் அரிசி ஆலை வாசலில் நின்ற தென்னை மரம் முறிந்து மஞ்சுநாத் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர்.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்