< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராணுவ தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியுடன் பறந்த டிரோன்
|16 Jan 2023 4:09 AM IST
ராணுவ தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை ஏந்தியவாறு டிரோன் மற்றும் பாரஷீட்கள் பறந்தன.
பெங்களூரு,
நாட்டின் 75வது ராணுவ தின விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் தளபதியாக கரியப்பா பொறுப்பேற்றுக் கொண்ட நாளை நினைவுகூறும் விதமாக ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லி கரியப்பா மைதானத்தில் ராணுவ தின விழா நடைபெறும் இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.
ராணுவ தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை ஏந்தியவாறு டிரோன் மற்றும் பாரஷீட்கள் பறந்தன.எல்லை பாதுகாப்பில் டிரோன்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்து என்பதை குறிக்கும் விதமாக டிரோன்கள் பறக்கவிடப்பட்டன.
ராணுவ தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியுடன் பறந்த டிரோன்