கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது..!
|கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றார்.
அவருக்கு டாக்டர் அபுபக்கர் சிகிச்சை அளித்தார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி அழுதுகொண்டே இருந்தார். இதுபற்றி பெற்றோர் கேட்டபோது, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி டாக்டர் அபுபக்கரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.