< Back
தேசிய செய்திகள்
கலசேஸ்வரா கோவில் உண்டியலில் நூதன வேண்டுதலுடன் கடிதம் எழுதி போட்ட பக்தர்
தேசிய செய்திகள்

கலசேஸ்வரா கோவில் உண்டியலில் நூதன வேண்டுதலுடன் கடிதம் எழுதி போட்ட பக்தர்

தினத்தந்தி
|
25 Sept 2022 1:15 PM IST

கலசாவில் உள்ள கலசேஸ்வரா கோவில் உண்டியலில் நூதன வேண்டுதலுடன் பக்தர் ஒருவர் கடிதம் எழுதி போட்டுள்ளார்.

சிக்கமகளூரு;


கடவுளிடம் எல்லோரும் பொன் வேண்டும், பொருள் வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் சிக்கமகளூருவில் ஒருவர் தனது குடும்பத்தினருக்காக வேண்டி உண்டியலில் கடிதம் எழுதி போட்ட சம்பவம் நடந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா உக்கடாவில் உள்ள கலசேஸ்வரா கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

அப்போது உண்டியலில் ஒரு கடிதம் கிடந்தது. அந்த கடிதத்தில், தனது குடும்பத்தினர் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும், எந்த இடையூறும் இன்றி எனக்கு திருமணம் நடக்க வேண்டும், வருங்கால மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எழுதியதுடன் சிலர் பெயரையும் எழுதி இருந்தார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்