கேதார்நாத் யாத்திரையில் செல்பி எடுக்கும்போது விபரீதம்..வெளியான பரபரப்பு வீடியோ
|கேதார்நாத் கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர் ஒருவர் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்தார்.
சண்டிகர்,
இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் கடந்த மாதம் தொடங்கியது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நண்பர்கள் சிலர் யாத்திரை மேற்கொண்டனர். மலையேற்றப் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ரம்பாடா பகுதி அருகே மந்தாகினி ஆற்றில் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார். ஆற்றின் நடுவே உள்ள பாறையில் சிக்கியிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.