< Back
தேசிய செய்திகள்
பண்ட்வாலில்  விபத்தில் சமையல் தொழிலாளி சாவு
தேசிய செய்திகள்

பண்ட்வாலில் விபத்தில் சமையல் தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

பண்ட்வாலில் விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா உடுப்பா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 58). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சீனிவாஸ் பி.சி.ரோடு பகுதியில் இருந்து புஞ்சல கட்டேவிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பண்ட்வாலை அடுத்த தங்கல்பாடி என்ற இடத்தில் வந்தபோது கார் ஒன்று இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் சீனிவாஸ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பண்ட்வால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பண்ட்வால் போலீசார் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்