< Back
தேசிய செய்திகள்
ரூ.10 லட்சம் கேட்டு காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

ரூ.10 லட்சம் கேட்டு காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
3 Sept 2022 9:04 PM IST

குந்தாபுரா அருகே ரூ.10 லட்சம் கேட்டு காங்கிரஸ் பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;


கொலை மிரட்டல்

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் ஷெட்டி (வயது 28). இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இவரை மர்மநபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டு மிரட்டி உள்ளார்.

மேலும், பணத்தை கொடுக்காவிட்டால் அஜித் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் செல்போன் இணைப்பை துண்டித்தார். இந்த நிலையில் மீண்டும் மர்மநபர்கள், அஜித்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ெதால்லை கொடுத்தார்.

2 பேர் கைது

ஆனால் அஜித் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் ரூ.10 லட்சத்தை தராவிட்டால் நாளை காலைக்குள் உன்னை கொலை செய்துவிடுவதாக கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகரான அஜித், கோட்டா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது அஜித்தை கொலை செய்வதாக மிரட்டியதாக பாரத் தாஸ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்