< Back
தேசிய செய்திகள்
சீனாவின் அடாவடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சீனாவின் அடாவடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

தினத்தந்தி
|
5 April 2023 12:50 AM IST

சீனாவின் அடாவடிக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள அருணாசலபிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ள செயலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்தக் கட்சியின் தலைவர் கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " 3-வது முறையாக அருணாசலபிரதேசத்தில் உள்ள நமது பகுதிகளுக்கு சீனா மறுபெயர் சூட்டி இருக்கிறது. ஏப்ரல், 21, 2017-ல் 6 இடங்களுக்கும், டிசம்பர், 30, 2021-ல் 15 இடங்களுக்கும், ஏப்ரல் 3, 2023-ல் 11 இடங்களுக்கும் சீனா மறுபெயர்களைச் சூட்டுவதற்கு துணிந்துள்ளது. அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. அப்படித்தான் நீடிக்கும். கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பிறகு, சீனாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய நற்சான்றிதழின் விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது" என கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " சீனா நமது 2,000 ச.கி.மீ. பகுதியைப் பறித்துள்ளது. அவர்கள் நமது இடங்களுக்கு பெயர்களைச் சூட்டுகின்றனர். பிரதமர் அமைதி காக்கிறார், பதில் இல்லை. ஏன் இந்த அச்சம்?" என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்