< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
300 அடி குழிக்குள் விழுந்த குழந்தை.. இரவு பகலாக தீவிரமடையும் மீட்பு பணி.. அடுத்தடுத்த ஆழ்துளை பயங்கரம்
|8 Jun 2023 8:38 AM IST
ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணறு குழிக்குள் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டினாலும் 20அடிக்கு கீழ் பாறைகள் உள்ளதாகவும், இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.