புத்தூரில் விஷம் குடித்த கார் டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு
|புத்தூரில் விஷம் குடித்த கார் டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கட்டத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசிர் (வயது24). இவர் அப்பகுதியில் கார் டிரைவராக உள்ளார். இந்தநிலையில் அப்துல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நான் பெல்லாரே பகுதியில் கார் ஓட்டி சென்றபோது, அந்தப்பகுதியில் இருந்த நபர்கள் என்னை தாக்கினர். இதனால் நான் மனமுடைந்து உள்ளேன். மேலும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அப்துல், புத்தூர் ரெயில் நிலையம் அருகே விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அப்துல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.