< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உ.பி.யில் டிரக் மீது கார் மோதி விபத்து - குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
|10 Dec 2023 9:12 AM IST
மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த டிரக் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் காரின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.