< Back
தேசிய செய்திகள்
மளிகைக்கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது - சுப்பிரமணிய சாமி விமர்சனம்
தேசிய செய்திகள்

மளிகைக்கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது - சுப்பிரமணிய சாமி விமர்சனம்

தினத்தந்தி
|
2 Feb 2023 9:02 AM IST

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை மளிகை கடைக்காரரின் பில் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்துள்ளார். இது பட்ஜெட் அல்ல. இது மளிகை கடைக்காரரின் பில் என அவர் சாடியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நேற்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகை கடைக்காரர் ஒருவரின் பில்லாக உள்ளது. சரியான பட்ஜெட் என்பது நாட்டின் குறிக்கோள்கள் என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன? என்ன என்பதை கூற வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்து காட்ட வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்