< Back
தேசிய செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
தேசிய செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
18 Aug 2023 12:15 AM IST

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

காட்டன்பேட்டை:

விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடியை சேர்ந்தவர் சசிதர் (வயது 24). இவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிப்போய் சசிதர் திருமணம் செய்திருந்தார். அதன்பிறகு அவர், சிறுமியை கிராமத்துக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து சசிதர் மீது சிறுமியின் குடும்பத்தினர் பசவனபாகேவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த சசிதர், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த சசிதர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக செல்பி வீடியோவில் சிறுமியின் குடும்பத்தினர் மீது அவர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். சிறுமியை திருமணம் செய்ததால் போலீசாரின் கைதுக்கு பயந்து விஜயாப்புராவில் இருந்து பெங்களூருவுக்கு வந்து சசிதர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்