< Back
தேசிய செய்திகள்
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், மாடியிலிருந்து குதித்து தற்கொலை
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், மாடியிலிருந்து குதித்து தற்கொலை

தினத்தந்தி
|
30 July 2024 2:33 AM IST

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரை சேர்ந்த சிறுவன் ஒருவன் அப்பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவன் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுடையவனாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சிறுவன் திடீரென தான் வசிக்கும் குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, போலீசார், சிறுவனின் அறையில் சோதனை செய்தனர். அப்போது தற்கொலை குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்