< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு...!
|3 Aug 2022 2:38 AM IST
காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ராம்பன்,
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டு போலீஸ் நிலையத்தின் காங்கிரீட் கூரை மீது விழுந்து வெடித்தது.
இந்த குண்டு வீச்சு தாக்குதலால் கட்டிடத்தில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டபோதிலும், போலீசாருக்கு எந்தவித காயங்களும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து போலீசாரும், ராணுவமும் இணைந்த குழுவினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரி கஷ்னவி போர்ஸ் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.