< Back
தேசிய செய்திகள்
தாயை பிரிந்து கண்ணீரில் தவித்த குட்டியானை... விரட்டி விரட்டி அடித்த கொடூரர்கள்
தேசிய செய்திகள்

தாயை பிரிந்து கண்ணீரில் தவித்த குட்டியானை... விரட்டி விரட்டி அடித்த கொடூரர்கள்

தினத்தந்தி
|
15 Oct 2022 2:34 PM IST

அசாம் மாநிலத்தில் குட்டி யானையை ஒரு கும்பல் சித்ரவதை செய்யும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அசாம்:

அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லங்கா நகரின் ஹல்பகன் என்ற பகுதியில் குட்டியானை ஒன்று கடந்த் 12-ம் தேதி வழிதவறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தனியே தவித்து நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி விரட்டி துன்புறுத்தினர்.

தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த குட்டி யானையை வாலைப் பிடித்து இழுத்தும், மனிதமே இல்லாமல் அடித்தும் கொடுமைப்படுத்தினர். தன் உயிரைக் காக்க அச்சத்தில் பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடி, அங்கிருந்து அந்த குட்டி யானை தப்ப முயன்றது. தற்போது காண்போரை கண் கலங்க வைக்கும் இந்த வீடியே இணையத்தை உலுக்கியுள்ளது.

இதுபோன்று விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் முதல் முறை அல்ல. இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்