உடுப்பியில் குட்டையில் தவறி விழுந்து 3 வயது சிறுமி சாவு
|உடுப்பியில் குட்டையில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
மங்களூரு-
உடுப்பி மாவட்டம் ஹெப்ரி அருகே உள்ள நால்கூர் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா (வயது 3) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில் சிறுமி தனது பாட்டியுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தாள். அப்போது அந்தப்பகுதியில் உள்ள குட்டையில் கிருத்திகா தவறி விழுந்தாள்.
இதனை பார்த்து பாட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் குட்டையில் குதித்து சிறுமியை தேடினர். ஆனால் சிறுமியை காணவில்லை. பின்னர் நீண்ட நேரம் போராடி சிறுமியை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஹெப்ரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஹெப்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.