டெல்லி மெட்ரோ ரெயிலில் மருத்துவ மாணவர் உயிரிழப்பு
|சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி,
அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மயங்க் கார்க் (வயது 26). இவர் டெல்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தேர்வு எழுதுவதற்காக பல்லப்கரில் இருந்து மெட்ரோ ரெயிலில் ஐ.எஸ்.பி.டி. நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜவஹர்லால் மெட்ரோ நிலையம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது மயங்கி திடீரென்று ரெயிலிலேயே சரிந்து விழுந்தார். ரெயிலில் பயணித்த சக பயணி ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை (CPR) அளித்துள்ளார். இதனை பற்றி அறிந்த டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.