கொசு மருந்தை குடித்த 2 வயது குழந்தை சாவு
|ஒன்னாவரில் கொசு மருந்தை குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.
கார்வார்:
உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா காவர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் ஆரவ் மகேஷ் நாயகா (வயது 2). தம்பதி தங்களது வீட்டில் கொசுகடியில் இருந்து தப்பிக்க ஆல்-அவுட் கொசு மருந்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஆல்-அவுட் பாட்டிலில் ஊற்றுவதற்காக கொசு மருந்தை வாங்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அந்த கொசு மருந்தை எடுத்து குடித்துள்ளது.
இதில் வாயில் நுரை தள்ளியபடி குழந்தை மயங்கி விழுந்தது. உடனே அந்த தம்பதி, குழந்தையை மீட்டு உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்தது. இதுகுறித்து ஒன்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.