செல்போன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை... நம்பி சென்ற 17 வயது சிறுமிக்கு ஆண் நண்பரால் அரங்கேறிய கொடூரம்
|ஆண் நண்பரை நம்பி சென்ற சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நகரில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர், தனது ஆண் நண்பர் ஒருவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி, தனது ஆண் நண்பரிடம், தனக்கு செல்போன் வாங்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். அப்போது அந்த ஆண் நண்பர், தான் உனக்கு செல்போன் வாங்கி தருவதாகவும், அதற்காக ஹுப்பள்ளி நகருக்கு சிறுமியை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆண் நண்பர் செல்போன் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில் அந்த சிறுமியும் நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது அந்த ஆண் நண்பர், தனது சக நண்பர்களான 3 பேர் என மொத்தம் 4 பேர் ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வன்கொடுமை செய்ததுடன், அதை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மிரட்டிய அவர்கள், நடந்த சம்பவத்தை வெளியே கூறியால், வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டியிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி, வீட்டிற்கு சென்றபோது, மிகவும் சோகமாக இருந்துள்ளார். சிறுமி வழக்கம் போல் இல்லாமல் சோகமாக இருப்பதை கவனித்த பெற்றோர், ஏன் என விசாரித்ததில், அந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், குற்றவாளிகளான 4 பேரையும் கைதுசெய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.