< Back
தேசிய செய்திகள்
பூட்டி இருந்த அரசு பள்ளியை உடைத்து கொள்ளை, 16 வயது சிறுமி பலாத்காரம்; டெல்லியில் அவலம்
தேசிய செய்திகள்

பூட்டி இருந்த அரசு பள்ளியை உடைத்து கொள்ளை, 16 வயது சிறுமி பலாத்காரம்; டெல்லியில் அவலம்

தினத்தந்தி
|
5 April 2023 3:05 PM IST

டெல்லியில் பூட்டி இருந்த அரசு மாநகராட்சி பள்ளியை உடைத்து, உள்ளே புகுந்த சிறுவன் கொள்ளை அடித்ததுடன், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளான்.

புதுடெல்லி,

டெல்லியில் அரசு மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஒப்பந்த தொழிலாளர்களாக கணவன், மனைவி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 18 வயது மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களாக அந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால், தொழிலாளர் தனது குடும்பத்துடன் பள்ளியிலேயே தங்கி உள்ளார். கணவன், மனைவி இருவரும் தங்களுக்கான கூலியை பெறுவதற்காக நேற்று பள்ளியை விட்டு சென்று உள்ளனர்.

இதனால், இரு சகோதரிகளும் தனியாக இருந்து உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் சிறுவன் ஒருவன் பூட்டி இருந்த அரசு பள்ளியை உடைத்து கொண்டு, உள்ளே புகுந்து உள்ளான்.

இதன்பின்னர், பள்ளியில் கொள்ளையடித்து விட்டு, அந்த சிறுவன் கத்தி ஒன்றை எடுத்து கொண்டு சென்றுள்ளான். போகும்போது, பள்ளியில் இருந்த 16 வயது சிறுமியையும் கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான் என எப்.ஐ.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளியை நாங்கள் தேடி வருகிறோம்.

நாங்கள் பல்வேறு சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளனர். ஒவ்வொரு கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்