< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டியூஷன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
|8 Jan 2023 11:33 PM IST
புதுச்சேரியில் டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த தசரதன் என்பவரின் மகன் பாலமுருகன். புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளான்.
தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2 நாட்களாக சிறுவன் டியூஷனுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை தந்தை கண்டித்ததால், மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.