< Back
தேசிய செய்திகள்
வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றனமாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

தினத்தந்தி
|
24 March 2023 3:45 AM IST

வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை 9 மாநிலங்கள் வாபஸ் பெற்றுள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

'வாகன்' இணையதளத்தில் கிடைத்த தகவல்களின்படி, மின்சார வாகனங்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்ப்டட நிலையில், கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 மின்வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 2 லட்சத்து 78 ஆயிரம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பசுமை நெடுஞ்சாலை கொள்கைப்படி, 2016-2017 நிதிஆண்டில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம்வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 34 கோடியே 42 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளது.

பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கைப்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் இம்மாதம்வரை 8 ஆயிரத்து 220 பழைய வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதா வது:-

1946-ம் ஆண்டின் டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்டத்தின் 6-வது பிரிவுப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அந்தந்த மாநிலங்கள், சி.பி.ஐ.க்கு பொது அனுமதி வழங்க வேண்டும். அதுபோல், எல்லா மாநிலங்களும் பொது அனுமதி வழங்கி இருந்தன.

ஆனால், சத்தீஷ்கார், ஜார்கண்ட், கேரளா, மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ.க்கான பொது அனுமதியை வாபஸ் பெற்று விட்டன.

இவ்வாறு அவர் கூறி னார்

பழைய வாகனங்கள் அழிப்பு

பொது அனுமதி வாபஸ்

மேலும் செய்திகள்