< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்

தினத்தந்தி
|
24 May 2022 5:27 AM IST

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை அமைதிப்பாதையில் திருப்புவதற்காக, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்பலனாக அடுத்தடுத்து நக்சலைட்டுகள் சரண் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், சுக்மா மாவட்டம் பஸ்தார் பிராந்தியத்தில் 9 நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். அவர்களில், தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஒரு நக்சலைட்டும், 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் ஏராளமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்