< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
ஏப்ரல் 1 முதல் 9 லட்சம் வாகனங்களுக்கு தடை: மத்திய மந்திரி நிதின் கட்கரி

31 Jan 2023 2:21 PM IST
அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அரசுப்பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ள நிதின் கட்காரி , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.