< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உணவுத் திருவிழாவில் சாப்பிட்ட 80 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
|21 April 2023 6:35 AM IST
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உணவுத் திருவிழாவில் சாப்பிட்ட 80 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தன்பாத்,
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் குச்சுக்டன்டாட் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை உணவு திருவிழா நடந்தது. அதில் சாப்பிட்டவர்கள் வயிற்றுவலி மற்றும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து 80-க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிவில் சர்ஜன் டாக்டர் அலோக் விஸ்வகர்மா உத்தரவிட்டுள்ளார்.