< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலையில் 18-ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் செல்ல ஏற்பாடு
|17 Dec 2022 11:38 AM IST
சபரிமலையில் 18-ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வரை சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலையில் 18-ம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
நாள்தோறும் சபரிமலைக்கு 90,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் தேவசம்போர்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சபரிமலையில் இன்று 90,827 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.