< Back
தேசிய செய்திகள்
அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

தினத்தந்தி
|
26 Dec 2022 5:08 PM IST

குஜராத்தில் அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாஹோத்,

குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கனமான இரும்பு கேட் அருகே அஷ்மிதா மொஹானியா என்ற 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கீல்கள் அறுந்ததில் இரும்புக் கதவு சிறுமி மீது விழுந்தது.

இதனால் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக தாஹோத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பள்ளியின் முதல்வர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மயூர் பரேக் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தாஹோத் கிராமப்புற காவல் நிலையத்தில் விபத்து மரணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்