< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் - சிபிசிஐடி போலீசார் அதிரடி
மாநில செய்திகள்

வேங்கைவயல் சம்பவத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேர் - சிபிசிஐடி போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
18 May 2023 9:44 AM IST

வேங்கைவயல் சம்பவத்தில், டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், முதல் கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களில் 3 பேர் மட்டுமே டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். 8 பேர், பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, கடந்த 8-ம் தேதி, 10 பேருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டி.என்.ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்ட பரிசோதனையில் வர மறுத்த 8 பேருக்கு சிபிசிஐடி போலீசார், சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அழைக்கும் தேதியில் 8 பேருக்கும் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

மேலும் செய்திகள்