< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
78-வது சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
|15 Aug 2024 12:30 PM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி இன்று இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. டூடுலில் இந்திய பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்ட வண்ணங்கள் நிறைந்த கதவுகளில் கூகுள் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. ஒவ்வொரு கதவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரம், மதம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.