< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் வேகமாக வந்த கார் மோதியதில் 7 யாத்ரீகர்கள் பலி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் வேகமாக வந்த கார் மோதியதில் 7 யாத்ரீகர்கள் பலி

தினத்தந்தி
|
31 Oct 2022 9:44 PM IST

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் இன்று மாலை யாத்ரீகர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்.

சோலாப்பூர்,

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் இன்று மாலை யாத்ரீகர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 நாட்களுக்கு முன்பு சுமார் 32 பக்தர்கள் கொண்ட குழு கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜதர்வாடியிலிருந்து கோவில் நகரமான பந்தர்பூருக்கு நடைப்பயணம் மேற்கொண்டது.

இந்த நிலையில் மும்பையில் இருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கோலா நகருக்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, மாலை 6.45 மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேகமான கார் ஒன்று பின்னால் இருந்து வந்து அவர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்