< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் கொலையில் ஆந்திர மந்திரியின் உதவியாளர் உள்பட 7 பேர் கைது
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் கொலையில் ஆந்திர மந்திரியின் உதவியாளர் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் கொலையில் ஆந்திர மந்திரியின் உதவியாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்லாரி:

பல்லாரி டவுன் கவுல்பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் (வயது 35). ரவுடியான கொப்பல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகவேந்திர ஹித்னாலின் உறவினர் ஆவார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மஞ்சுநாத்தை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கவுல்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மஞ்சுநாத்தை கொலை செய்ததாக ஆந்திர தொழிலாளர் துறை மந்திரி கும்மனூர் ஜெயராமின் உதவியாளரான பாஸ்கர், கவுல்பஜாரில் வசித்து வரும் இலியாஸ், உசேன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

விசாரணையில் மஞ்சுநாத்தும், இலியாசும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு மக்களிடம் இருந்து வாங்கி அதை பாலீஷ் போட்டு அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. தொழில் போட்டி காரணமாக மஞ்சுநாத், இலியாஸ் இடையே பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக பாஸ்கர் உதவியுடன் கூலிப்படையை ஏவி மஞ்சுநாத்தை, இலியாஸ் கொன்றது தெரியவந்து உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்