< Back
தேசிய செய்திகள்
7 பேரிடம் நூதன முறையில் பண மோசடி; மர்ம நபர் துணிகரம்
தேசிய செய்திகள்

7 பேரிடம் நூதன முறையில் பண மோசடி; மர்ம நபர் துணிகரம்

தினத்தந்தி
|
22 Aug 2022 8:42 PM IST

முகநூல் கணக்கு, வாட்ஸ்-அப் எண்களை முடக்கி 7 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்த மா்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் வசித்து வரும் 7 பேருக்கு, அவர்களது நண்பர்களின் வாட்ஸ்-அப் எண், முகநூல் பதிவு மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பண உதவி கேட்டு தகவல் வந்தது.

அதன்பேரில் 7 பேரும் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தினர். பின்னர் அவர்கள் தங்களது நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு பண உதவி எதுவும் தேவைப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ மர்ம நபர் முகநூல் கணக்கு மற்றும் வாட்ஸ்-அப் எண்களை முடக்கி அதன்மூலம் பண உதவி கேட்டு தகவல் அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிக்கமகளூரு டவுன் போலீசார் இந்த நூதன மோசடி பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்