< Back
தேசிய செய்திகள்
இமாச்சலப்பிரதேசத்தில் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் உயிரிழப்பு..!
தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் உயிரிழப்பு..!

தினத்தந்தி
|
1 Aug 2022 7:51 PM IST

இமாச்சலப் பிரதேசம், உனா மாவட்டத்தில் உள்ள கோபிந்த் சாகர் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உனா,

இமாச்சலப் பிரதேசம், உனா மாவட்டத்தில் உள்ள கோபிந்த் சாகர் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று மதியம் சுமார் 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக உனா மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த 11 இளைஞர்கள் அப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர். அப்போது கரீப் நாத் கோவிலுக்கு அருகிலுள்ள கோபிந்த் சாகர் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும், அவர்களில் ஆறு பேர் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ஒருவர் மட்டும் 30 வயது நபர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்