< Back
தேசிய செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன 19 கட்டிடத் தொழிலாளர்களில் 7 பேர் மீட்பு
தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன 19 கட்டிடத் தொழிலாளர்களில் 7 பேர் மீட்பு

தினத்தந்தி
|
23 July 2022 2:07 PM IST

அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன 19 கட்டிடத் தொழிலாளர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி

அருணாசல பிரதேசம் குருங் குமே மாவட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 13 ஆம் தேதி இரு குழுக்களாக பிரிந்து ஆற்றை கடந்த போது காட்டு பகுதிக்குள் வழி தவறி சென்றதாகத் கூறப்படுகிறது.

விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் 7 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மிகவும் சோர்வாக உள்ள அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்