< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பையில் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- 7 பேர் பலி
|6 Oct 2024 12:50 PM IST
தரைத்தளத்தில் உள்ள கடையில் உள்ள மின் வயரிங் மற்றும் பொருட்களில் முதலில் தீப்பற்றி பின்னர் மேலே உள்ள வீட்டிற்கும் பரவியது.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சித்தார்த் காலனியில் உள்ள கடையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் மின் வயரிங் மற்றும் பொருட்களில் முதலில் தீப்பற்றியதாகவும், அதன்பின்னர் மேலே உள்ள வீட்டுக்கு தீ பரவியதாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.