< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் வீடு இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

டெல்லியில் வீடு இடிந்து விழுந்து விபத்து - 7 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
16 Sept 2022 6:11 PM IST

வடகிழக்கு டெல்லியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கத்தில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேர் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

தொழிலாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென முதல் மாடியின் கூரை இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்