< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளத்தில் பரிதாபம் - மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
|22 Jun 2023 3:35 AM IST
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியானது. அவர்களில் 3 பேர் குழந்தைகள் என்று தெரியவந்தது.
பழைய மால்டாவில் ஒருவரும், கலியாசாக் பகுதியில் 6 பேரும் உயிரிழந்து உள்ளனர். இது தவிர மின்னல் தாக்கி 9 கால்நடைகளும் பலியாகி உள்ளன.