< Back
தேசிய செய்திகள்
ஜாபர் சாதிக்குக்கு 7 நாள் என்.சி.பி காவல்
தேசிய செய்திகள்

ஜாபர் சாதிக்குக்கு 7 நாள் என்.சி.பி காவல்

தினத்தந்தி
|
9 March 2024 7:00 PM IST

ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று கைது செய்யப்பட்டார்

புதுடெல்லி,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக் நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்த்த போதைப்பொருள் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார் .

உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் சினிமாவில் முதலீடு செய்துள்ளார் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.

இதனை தொடர்ந்து ஜாபர் சாதிக்கிறகு 7 நாள் என்.சி.பி. வழங்கி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்