< Back
தேசிய செய்திகள்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என தகவல்
தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு என தகவல்

தினத்தந்தி
|
27 March 2024 2:42 PM IST

7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர்.

இந்தநிலையில், சிறையில் உள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ளது, இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்தபடியே முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்