< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புனேவில் ஜூன் மாதம் முதல் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி
|7 Aug 2024 1:53 AM IST
புனேவில் ஜூன் மாதம் முதல் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 68 முதல் 78 வயது வரையிலான 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புனே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உயிரிழந்தவர்கள் 4 பேருக்கும் ஏற்கனவே சில உடல்நல பாதிப்புகள் இருந்ததாக தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஜிகா வைரஸ் பாதிப்பால் அவர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
புனேவில் கடந்த ஜூன் 20-ந்தேதி, 46 வயதான டாக்டர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களில் அவரது 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 66 நபர்களில் 26 பேர் கர்ப்பிணி பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.