காதலர்கள் தற்கொலை: 6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சிலைக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்
|காதலர்கள் தற்கொலை செய்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சிலைக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர்.
தாபி,
குஜராத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சிலைக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் தாபியில் கணேஷ், ரஞ்சனா என்ற காதல் ஜோடி அவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த நிலையில் அவர்கள் உயிருடன் இருந்த போது சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு காரணம் தாங்கள் தான் என்று எண்ணி மனம் வருந்திய குடும்பத்தினர் தற்போது அவர்களது சிலைகளை உருவாக்கி அந்த சிலைகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்ததை பார்த்தோம். அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் இதைச் செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.