< Back
தேசிய செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் பலி
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் பலி

தினத்தந்தி
|
12 Sept 2023 4:16 AM IST

காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் காரில் சிகாரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார் பரத்பூர் மாவட்டம் கான்சுராஜ்பூர் கிராமம் அருகே வந்தபோது தோல்பூரில் இருந்து பரத்பூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்