கொசுவர்த்தி சுருளால் மூச்சு விட முடியாமல் தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள்.. ஒரு குடும்பத்திற்கே நேர்ந்த சோகம்..!
|நச்சுத்தன்மை கொண்ட புகை வெளியேற வழி இல்லாததால் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளிவந்த நச்சு வாயு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாஸ்திரி பூங்கா அருகே வசிக்கும் குடும்பத்தினர், நேற்று இரவு கொசுவர்த்தியின் சுருளை ஏற்றிவைத்து தூங்கியுள்ளனர். அப்போது கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததில் தீப்பற்றி அறை முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை கொண்ட புகை வெளியேற வழி இல்லாததால், தூக்கத்தில் இந்த நச்சு வாயுவை சுவாசித்த 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கூறிய புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.