< Back
தேசிய செய்திகள்
பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி
தேசிய செய்திகள்

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 6 பேர் பலி

தினத்தந்தி
|
30 April 2024 3:36 PM IST

விபத்தில் படுகாயமடைந்த 18 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்கானில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பேருந்து மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி பயங்கரமாக சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து காரணமாக மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்