< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் டிரக் மீது ஜீப் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

குஜராத்தில் டிரக் மீது ஜீப் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
15 Feb 2023 7:31 PM IST

குஜராத்தில் ஜீப் டயர் வெடித்ததில் முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பதான்,

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் இன்று மதியம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பின்னால் இருந்து வந்த ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

ரதன்பூர் அருகே 15 பயணிகளை ஏற்றி கொண்டு ஜீப் ஒன்று வாராஹி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், முன்னால் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதியது.

இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ரதன்பூர் மற்றும் பதானில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்