< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

'இந்தியாவில் இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது' - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
8 Feb 2023 10:10 PM IST

இந்தியாவில் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய தொலைத் தொடர்புத்துறை இணை மந்திரி தேவுசின் சவுகான், எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது;-

"கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் நமது நாட்டில் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. கடந்த ஜனவரி 31, 2023 நிலவரப்படி இந்தியாவில் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிம சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது.

நம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏல நடவடிக்கை நடைபெறும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்