< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்டின் முதல் 5ஜி சோதனைக்கு பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தேர்வு
|23 July 2022 2:17 AM IST
பெங்களூருவில் ௫ஜி சேவை சோதனை செய்யப்பட்டது.
பெங்களூரு:
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொலைத்தொடர்பு துறையில் இணையதளம் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் நாட்டில் உள்ள மெட்ரோ நிலையங்களில் 5ஜி சேவையை சோதனை முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில், மெட்ரோ நிர்வாகத்திற்கு உட்பட்ட எம்.ஜி. ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் 5ஜி சோதனை செய்யப்பட்டது. இதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5 ஜி சேவையை சோதனை செய்தது. சுமார் 200 மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த 5ஜி சேவை சோதனையில் பதிவிறக்க வேகம் நொடிக்கு 1.45 ஜிகா பைட் என்ற அளவில் இருந்தது. பதிவேற்ற வேகம் 65 மெகா பைட் என்றளவில் இருந்தது. இது தற்போதுள்ள 4ஜி சேவையைவிட 50 மடங்கு வேகமாகும்.